பலசரக்கு கடையில் ரூ.80 ஆயிரம் திருட்டு: சிறுவன் கைது
கயத்தாறு பகுதியில் உள்ள பலசரக்கு கடையை ஒருவர், மூடிவிட்டு மருத்துவமனைக்கு சென்று, திரும்பி வந்து கடையை திறந்த பிறகு அங்கிருந்த ரூ.80 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.;
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள செட்டிகுறிச்சி காலனி அருகே உள்ள பெரியசாமி மகன் விஜய் (வயது 33). சம்பவத்தன்று இவருக்கு உடல் நிலை சரியில்லாததால், கடையை மூடிவிட்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் கடைக்கு திரும்பி சென்றார். பூட்டியிருந்த கடையை திறந்து வியாபாரம் செய்தபோது, கடையில் இருந்த ரூ.80 ஆயிரம் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் செட்டிக்குறிச்சி பஞ்சாயத்து இந்திராநகர் காலனியை சேர்ந்த 17 வயது சிறுவன் பலசரக்கு கடையில் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கயத்தாறு சப்-இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி அந்த சிறுவனை கைது செய்தார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அந்த சிறுவன் நெல்லையில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.