பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை: மருத்துவ வாகனத்தை பார்வையிட்டார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.;

Update:2025-11-13 10:52 IST

சென்னை,

முன்னதாக பெண்களுக்கு புற்றுநோய் பரிசோதனை மருத்துவ வாகன சேவை குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சரால் விரைவில் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் (Womens wellness) என்கின்ற வகையில் வாகனச் சேவை விரைவில் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படவிருக்கிறது. பெண்கள் 100 சதவீதம் அனைவரும் புற்றுநோய் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளாக கருப்பைவாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் என்று ஏறத்தாழ 8 வகையான புற்றுநோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதற்கு முழுமையான பரிசோதனைகள் செய்யக்கூடிய ஒரு திட்டம், வாகனங்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அனுப்பி முழு பரிசோதனை வசதிகளுடன் கூடிய அந்த வாகனம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

38 மாவட்டங்களுக்கும் 38 வாகனங்கள் வடிவமைக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைவில் தமிழ்நாடு முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்படவிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், பெண்கருக்காக ரூ.1.10 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள நடமாடும் மருத்துவ வாகனத்தை இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு திட்டத்தின் கீழ், டிஜிட்டல் மேம்மோகிராபி, இசிஜி கருவி, செமி-ஆட்டோ அனலைசர் உள்பட பல வசதிகளுடன் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூ.40 கோடி செலவில் 38 நடமாடும் மருத்துவ வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்