சென்டிரல் - சூலூர்பேட்டை மின்சார ரெயில்கள் ரத்து

கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே இன்று பராமரிப்பு பணி நடைபெறுகிறது.;

Update:2025-06-14 07:06 IST

கோப்புப்படம்

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால் இன்று (சனிக்கிழமை) மற்றும் வருகிற 16, 19-ந் தேதிகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி, சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30, 3.15 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்டிரலில் இருந்து காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள், சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1,15, 3.10 இரவு 9 மணிக்கு சென்டிரல் வரும் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் மின்சார ரெயில் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

சிறப்பு ரெயில்கள்

இந்த நாட்களில் சென்டிரல் -பொன்னேரிக்கு காலை 10.30 மணிக்கும், சென்டிரல்-மீஞ்சூருக்கு காலை 11.35 மணிக்கும், கடற்கரை-பொன்னேரிக்கு மதியம் 12.40 மணிக்கும், பொன்னேரி-சென்டிரலுக்கு மதியம் 1.18, 3.33 மணிக்கும், மீஞ்சூர்-சென்டிரலுக்கு மதியம் 2.59 மணிக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்