சென்னை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு சேவைகள் 2 நாட்கள் நிறுத்தம்

சனிக்கிழமை காலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.;

Update:2025-07-24 19:26 IST

சென்னை,

சென்னை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் 2 நாட்கள் நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

"பெருநகர சென்னை மாநகராட்சியில் இணையவழி சேவைகளின் பயன்பாடுகள் சேவைகளின் பாதுகாப்பு (Security), கிடைக்கும் தன்மை (Availability), அளவிடுதல் (Scalibility) ஆகியவற்றை நவீனப்படுத்தி, மேம்படுத்தும் நோக்கில் பெருநகர சென்னை மாநகராட்சியின் சேவையகங்களை (Server) மாநில தரவு மையத்திற்கு (State Data Centre) இடம் பெயர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனையொட்டி, பெருநகர சென்னை மாநகராட்சியின் நகரமைப்புப் பிரிவு தொடர்பான கூர்ந்தாய்வு சேவைகள் (Town Planning Scrutiny) 26.07.2025 சனிக்கிழமை காலை 6 மணி முதல் 28.07.2025 திங்கட்கிழமை காலை 6 மணி வரை நிறுத்தம் செய்யப்படவுள்ளது."

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்