நாளை காலை கரூர் செல்கிறார் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்?
கரூரில் இன்று தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலியாகியுள்ளனர்.;
கரூர்,
கரூரில் இன்று நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் 30 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவத்தால் கரூரில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்கள் அணி வகுத்தபடி செல்லும் காட்சிகள் காண்போரை கலங்க வைப்பதாக உள்ளது.
அரசு மற்றும், தனியார் மருத்துவமனைகளில் குழந்தைகள், பெண்கள் பலர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, நாளை காலை கரூருக்கு முதல் அமைச்சர் முக ஸ்டாலின் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.