644 பேருக்கு பணி நியமன ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் வழங்கினார்.;

Update:2025-08-22 11:15 IST

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் இன்று (22.08.2025) வெள்ளிக்கிழமை காலை 10.15 மணியளவில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 182 உதவி மருத்துவ அலுவலர்கள், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 48 பல் மருத்துவர்கள்,

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 324 அறுவை அரங்கு உதவியாளர்கள், தமிழ்நாடு சுகாதார போக்குவரத்து துறைக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு திறன்மிகு உதவியாளர் நிலை-2 மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 18 உளவியல் உதவி பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ உளவியலாளர்கள்,

மருந்து கட்டுப்பாடு இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 17 மருந்துகள் ஆய்வாளர்கள், குடும்ப நல இயக்ககத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 54 வட்டார சுகாதார புள்ளியிலாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட மொத்தம் 644 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்குகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் 644 பேர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்