பள்ளி மாணவர்களுக்கு பாடநூல்களை வழங்கிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன.;

Update:2025-06-02 11:41 IST

கோடை விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளான இன்றே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள லேடி வெலிங்க்டன் பள்ளிக்கு சென்றார். அங்கு புதிய கல்வியாண்டுக்கான பாடநூல்கள், சீருடைகள் உள்ளிட்ட உபகரணங்களை மாணவ-மாணவியருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.  

Tags:    

மேலும் செய்திகள்