துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரை வருகை

உதயநிதிஸ்டாலின் இன்று காலை பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் மரியாதை செலுத்துகிறார்.;

Update:2025-09-11 04:15 IST

துரை,

விடுதலைப் போராட்ட வீரர், தியாகி இமானுவேல் சேகரனின் 68 வது நினைவு தினம் இன்று(11-ந் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் நேரில் வந்து மலர் வளையம் வைத்து இன்று மரியாதை செலுத்துகிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக அவர் சென்னையிலிருந்து விமான மூலம் நேற்று இரவு மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், மூர்த்தி, பெரிய கருப்பன், ராஜகண்ணப்பன், எம்.எல்.ஏ.க்கள் தளபதி, வெங்கடேசன், தமிழரசி மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், கலெக்டர் பிரவீன்குமார், மேயர் இந்திராணி உள்ளிட்ட பலர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

பின்னர் விமானநிலையத்தில் இருந்து வெளியே வந்த அவருக்கு மதுரை வடக்கு, தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் மாவட்ட செயலாளர்கள் மூர்த்தி, மணிமாறன் தலைமையில் தொண்டர்கள் அனைவரும் பெரும் திரளாக கையில் இருவண்ண கொடியுடன் பங்கேற்று வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கினார்.

பின்னர் துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் இன்று காலை பரமக்குடி சென்று இமானுவேல் சேகரன் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தி விட்டு மதியம் 12 மணி அளவில் மீண்டும் சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்