நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்த ஜனாதிபதி திரவுபதி முர்மு

ஜனாதிபதியுடன் கடற்படை தளபதியும் நீர்மூழ்கி கப்பலில் பயணம் செய்தார்.;

Update:2025-12-28 13:29 IST

பெங்களூரு,

ஜனாதிபதி திரௌபதி முர்மு கோவா, கர்நாடகா மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய 3 மாநிலங்களில் 4 நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், தனது பயணத்தின் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று கடலில் பயணம் செய்தார்.

கல்வாரி வகையை சேர்ந்த நீர்மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். வாக்‌ஷீரில் ஜனாதிபதியும், முப்படைகளின் உச்ச தலைவருமான திரவுபதி முர்மு பயணம் மேற்கொண்டார். அவருடன் கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ் கே.திரிபாதியும் பயணம் செய்தார். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிற்கு பிறகு நீர்மூழ்கியில் பயணம் செய்த 2-வது இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

மேலும் செய்திகள்