காங்கிரசின் உண்மையான பலத்தை நிரூபிக்க வேண்டும் - பிரவீன் சக்கரவர்த்தி
காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்களுக்கு அக்கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
சென்னை,
காங்கிரஸ் கட்சியின் புதிய மாவட்ட தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அக்கட்சியின் முக்கிய பிரமுகர் பிரவீன் சக்கரவர்த்தி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுக்கும் வாழ்த்துகள். மற்ற எந்தக் கட்சிக்கும் அடிபணியாமல், சுயமரியாதை மற்றும் தன்னாபிமானத்துடன் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவதற்காக நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள்
காங்கிரஸின் உண்மையான அடிமட்ட பலத்தை ஒவ்வொரு மாவட்டத்திலும் நிரூபிக்க வேண்டியது உங்கள் கடமையாகும். வாழ்த்துகள்!”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.