தொடர் மழை.. சங்கரன்கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தென்காசி மற்றும் சங்கரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.;

Update:2025-12-17 12:06 IST

கோப்புப்படம்

சென்னை,

தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த சூழலில் தென்காசி மற்றும் சங்கரன் கோவில் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொடர் மழை காரணமாக சங்கரன் கோவிலில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி 6 முதல் 10 வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்கியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்