மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

நிர்ணயிக்கப்பட்ட 200 வினாடிகள் வெற்றிகரமாக இலக்கை அடைந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.;

Update:2025-06-01 17:22 IST

நெல்லை,

நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள காவல்கிணறு மகேந்திரகிரியில் இஸ்ரோ மையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து விண்ணில் விண்கலம் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின், விகாஸ் என்ஜின்கள், பி.எஸ்.4 என்ஜின் தயாரிக்கப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் விண்ணில் செலுத்தப்பட இருக்கும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 விண்கலம், பி.எஸ்.எல்.வி, ஜி.எஸ்.எல்.வி ராக்கெட்டுகளில் விகாஸ் என்ஜின் போன்றவை தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கிரையோஜெனிக் என்ஜினின் பல்வேறு கட்ட சோதனை நடத்த இஸ்ரோ திட்டமிட்டது. அதன்படி இஸ்ரோ மைய இயக்குனர் ஆசீர் பாக்யராஜ் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட 200 வினாடிகள் வெற்றிகரமாக இலக்கை அடைந்ததாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. இதனால் விஞ்ஞானிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.  

Tags:    

மேலும் செய்திகள்