செம்பரம்பாக்கம் ஏரியின் கூடுதல் நீரை பயன்படுத்தும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார்: அமைச்சர் கே.என். நேரு
ஊத்துகோட்டை பேரூராட்சிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா? என கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.;
சென்னை,
தமிழக சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது பேசிய கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், கண்ணன்கோட்டை, தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தில் இருந்து ஊத்துகோட்டை பேரூராட்சிக்கு தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, தேர்வாய் கண்டிகை நீர் தேக்கத்தில் இருந்து 32 கிலோ மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு செல்லும் பணியை ஊரக வளர்ச்சி துறை மேற்கொண்டு வருகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக வரும் 250 எம்எல்டி தண்ணீரை அருகில் உள்ள பகுதிகளுக்கு கொண்டு செல்லும் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருவதாக பதில் அளித்தார்.