தீபாவளி; சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்களால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.;

Update:2025-10-16 21:48 IST

சென்னை,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களில் வேலை பார்க்கும் பெரும்பாலானோர் இன்று முதல் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதற்காக சென்னையில் இருந்து தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருகிறது. பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் சொந்த வாகனங்களிலும் பயணித்து வருகிறார்கள்.

சென்னையில் இருந்து இன்றே நூற்றுக்கணக்கான வாகனங்களில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கோயம்பேடு - மதுரவாயல், வானகரம் - மதுரவாயல், தாம்பரம் புறவழி சாலை என அனைத்து பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. 5 கி.மீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்களால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்