இன்று தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது.;

Update:2025-11-13 08:13 IST

சென்னை,

தேமுதிக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் கழக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் 13-ந்தேதி (இன்று) காலை 10.00 மணியளவில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில்  நடைபெறவுள்ளது.

கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் கலந்தாலோசிக்கப்பட உள்ளது. அனைத்து மாவட்ட கழக செயலாளர்களும் தவறாமல் இந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்