‘தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை’ - எல்.முருகன்
முழுமையான ஓய்வூதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கவில்லை என எல்.முருகன் விமர்சித்துள்ளார்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
“அரசு ஊழியர்கள் கேட்ட முழுமையான ஓய்வூதிய திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கவில்லை. தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை.
கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தும் துப்புரவு பணியாளர்களை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்கிறார்கள். 100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்கள் ஆக்குவதாக மு.க.ஸ்டாலின் சொன்னார். ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் மறந்துவிட்டார்.
நமது பிரதமர் நரேந்திர மோடி 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் விபி ஜி ராம்ஜி திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார். தி.மு.க. அரசு செய்யாததை நாங்கள் செய்கிறோம். அதை வரவேற்காமல் எதிர்த்துக் கொண்டிருக்கிறார்.”
இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.