சென்னையில் போதைப்பொருள் கடத்தல் - மேலும் 5 பேர் கைது

கைதானவர்களிடம் இருந்து 54 கிராம் கொக்கைன், 6 கிராம் மெத்தப்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.;

Update:2025-06-01 22:58 IST

சென்னை,

சென்னையில் போதைப்பொருள் ஊடுருவலை தடுப்பதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவை காவல் ஆணையர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து சூளைமேடு, அசோக்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

போதைப்பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக இதுவரை 23 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று மேலும் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்படி கஜேந்திரன், பைசல் நூர், செல்வராஜ், இர்பான் மற்றும் விக்னேஷ் ஆகிய 5 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து 54 கிராம் கொக்கைன், 6 கிராம் மெத்தப்பெட்டமைன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் போதைப்பொருள் கும்பலை சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக தனிப்படை போலீசார் பெங்களூரு சென்றுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்