வீட்டு மாடியில் இருந்த செல்போன் டவரில் தீ - கன்னியாகுமரியில் பரபரப்பு

திடீரென வீட்டு மொட்டை மாடியில் செல்போன் டவர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;

Update:2025-07-02 09:10 IST

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி தக்கலை பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரின் வீட்டு மொட்டை மாடியில் செல்போன் டவர் ஒன்று இருந்தது. இந்த நிலையில் அவரது குடும்பத்தினர் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது மின்கசிவு காரணமாக திடீரென செல்போன் டவரில் தீ ஏற்பட்டது. இந்த தீயானது சிறிது நேரத்திலேயே மளமளவென எரியத்தொடங்கியது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த தீயணைப்புத்துரையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து துரிதமாக செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவித சம்பவம் எதுவும் ஏற்பட வில்லை.

திடீரென வீட்டு மொட்டை மாடியில் செல்போன் டவர் தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்