குன்னூரில் உறை பனிப்பொழிவு: தேயிலை செடிகள் கருகும் அபாயம்

காலநிலை மாற்றம் காரணமாக காலை, மாலையில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது.;

Update:2025-12-10 00:53 IST

குன்னூர்,

மலைப்பிரசேதமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்கள் குளிர் காலம் ஆகும். நவம்பர் மாதம் நீர் பனிப்பொழிவு காணப்படுகிறது. பின்னர் அடுத்த சில நாட்களில் உறை பனிப்பொழிவின் தாக்கம் இருக்கும். குறிப்பாக 3 மாதங்கள் பனிப்பொழிவு அதிகமாக இருப்பது வழக்கம். இந்தநிலையில் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை நேரத்தில் உறை பனிப்பொழிவின் தாக்கம் தொடங்கி உள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக காலை, மாலையில் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கிறது. அதிகாலையில் பசுமையான புல்வெளிகளில் நீர் கோர்த்து உள்ளது.

ஆற்றோரங்களில் உள்ள புல்வெளிகள் மீது உறைபனி கொட்டி கிடக்கிறது. இதனால் பச்சை பசேல் என இருந்த புற்கள் மீது வெள்ளை கம்பளம் விரித்தாற்போல் உறைபனி காணப்படுகிறது. தேயிலை தோட்டங்களில் தேயிலை செடிகள் மீது உறைபனி படர்ந்து காணப்படுகிறது. உறை பனிப்பொழிவின் தாக்கத்தால் கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் பாதிப்படைந்து உள்ளனர். அன்றாட பணிகளுக்கு செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். கடுங்குளிரை போக்க உல்லன் ஆடைகளை அணிவதோடு, சிலர் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்து வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்