பைக் விபத்தில் மாவு மில் உரிமையாளர் உயிரிழப்பு

கல்லாமொழி பெட்ரோல் நிலையத்திற்கு தனது பைக்கை மாவு மில் உரிமையாளர் ஒருவர் திருப்பியபோது, பின்னால் வந்த மற்றொரு பைக் மோதி விபத்து ஏற்பட்டது.;

Update:2026-01-18 12:18 IST

தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த காதர் முகைதீன் மகன் செய்யது இப்ராகிம் (வயது 78). இவர் காயல்பட்டினத்தில் மாவு மில் நடத்தி வந்தார். சம்பவத்தன்று மாவு மில் எந்திரம் கோளாறு காரணமாக அதனை சரி செய்வதற்கான உபகரணங்கள் வாங்க முடிவு செய்தார். இதற்காக தனது பைக்கில் மில்லில் வேலை செய்யும் அதே ஊரைச் சேர்ந்த குப்பாண்டி மகன் புளைந்தரன் என்பவரை அழைத்துக்கொண்டு சென்றார்.

இருவரும் உடன்குடிக்கு சென்றுவிட்டு மீண்டும் குலசேகரன்பட்டினம் வழியாகச் சென்றபோது கல்லாமொழி பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் நிரப்புவதற்காக பைக்கை செய்யது இப்ராகிம் திருப்பினார். அப்போது பின்னால் வந்த கூட்டம்புளியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் முத்துகிருஷ்ணன் ஓட்டிவந்த பைக் மோதியதில் செய்யது இப்ராகிம், புளைந்தரன் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.

அருகில் இருந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி செய்யது இப்ராகிம் பரிதாபமாக உயிரிழந்தார். புளைந்தரன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து செய்யது இப்ராகிம் மகன் நாகூர்கனி கொடுத்த புகாரின்பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்