பைக் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் உள்பட 2 பேர் பலி
தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் வேலை செய்யும் தனது தந்தையை பார்க்க இளம்பெண் ஒருவர், உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றார்.;
தூத்துக்குடி அமுதாநகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் மகள் முத்துச்செல்வி(எ) முத்துமாரி (வயது 24). இவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு, வருகிற பிப்ரவரி 15-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்த நிலையில் முத்துமாரி, கல்லூரியில் படித்து வந்த தன்னுடைய உறவினரான மணியாச்சி ஒட்டநத்தம் பகுதியைச் சேர்ந்த சிவா மகன் கலைச்செல்வன்(22) என்பவருடன், தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் வேலை செய்யும் தனது தந்தையை பார்க்க பைக்கில் நேற்று சென்றுள்ளார்.
அப்போது துறைமுகத்திலிருந்து உரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி, அவர்களது பைக் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தெர்மல்நகர் போலீசார், அவர்களது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.