அரசு நூலக கட்டிட விரிவாக்கத்துக்கு அடிக்கல்: சமூக ஆர்வலர்கள் 12 பேர் கைது

சமூக ஆர்வலர்கள், மக்களின் பங்களிப்புடன் கோவில்பட்டியில் அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்கான கட்டிடப் பணிகள் ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர்.;

Update:2026-01-03 15:41 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி-எட்டயபுரம் சாலையில் உள்ள அரசு நூலகத்தை விரிவாக்கம் செய்து டிஜிட்டல் நூலகம் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் அந்த கோரிக்கையின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள், மக்களின் பங்களிப்புடன் நூலகத்தை விரிவாக்கம் செய்வதற்கான கட்டிடப் பணிகள் ஜனவரி 1-ம் தேதி நடைபெறும் என ஏற்கெனவே அறிவித்திருந்தனர். நேற்று முன்தினம் நூலகம் அருகே உள்ள பகுதியில் கிழக்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மாரியப்பன், சுதாகர் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது வழக்கறிஞர் சரவணன், சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த ராஜேஷ்கண்ணா உள்ளிட்ட பலர் அங்கு திரண்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, இங்கு கட்டிடம் கட்டுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை நாடுமாறு அறிவுறுத்தினர். ஆனால், அவர்கள் நூலக விரிவாக்கத்துக்கு அடிக்கல் நாட்டுவோம் என தெரிவித்ததால், அதில் பங்கேற்ற 12 பேரை போலீசார் கைது செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்