கொடும்பாளூர் அகழாய்வில் தங்கத்திலான குண்டுமணி கண்டெடுப்பு

மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட பிரிவு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.;

Update:2025-04-20 22:12 IST

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே கொடும்பாளூரில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த மூவர் கோவில், முசுகுந்தீஸ்வரர் கோவில் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று புகழ்பெற்ற சின்னங்கள் அமைந்த கோவில்கள் உள்ளன. இந்நிலையில், மேலும் அங்குள்ள வரலாற்று சின்னங்களை கண்டறியும் நோக்கில் கொடும்பாளூரில் குடியிருப்புகள் அமைந்துள்ள அக்ரஹாரம் மேட்டு பகுதிகளில் மத்திய தொல்லியல் துறையின் திருச்சி வட்ட பிரிவு சார்பில் அகழாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அகழாய்வு பணியின் போது தங்கத்தால் செய்யப்பட்ட சிறிய அளவிலான குண்டுமணியும், மூடிய நிலையில் மண் பானை ஒன்றும் கிடைத்துள்ளது. குண்டுமணியின் எடை ஒருகிராம் ஆகும். மேலும் மூடிய நிலையில் உள்ள மண்பானையை உயர் அதிகாரிகள் வந்த பிறகு தான் சோதனை மேற்கொள்ள முடியும் என அங்கு பணியில் இருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்