பவானிசாகர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு - அரசு ஆணை
5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால்களிலுள்ள பாசன நிலங்களுக்கு 2025-2026 ஆம் ஆண்டு, முதல் போக பாசனத்திற்கு 16.06.2025 முதல் 13.10.2025 வரை 120 நாட்களுக்கு, 5184.00 மில்லியன் கன அடிக்கு மிகாமல், தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்திலுள்ள, பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டங்களிலுள்ள 15743 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.