ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் விலை உயர்த்தப்பட்டுள்ளதா? - அரசு விளக்கம்

ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்று தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.;

Update:2026-01-07 12:34 IST

ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என்ற வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருமடங்கு (ரூ.6) விலை உயர்த்தப்பட்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் ஒரு பதிவு பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 2021-ம் ஆண்டு தமிழ்நாடு முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் அவர்கள் பொறுப்பேற்றவுடன் ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட்டாகும். இதில் கூடுதலாக வைட்டமின் ஏ மற்றும் டி செறிவூட்டப்பட்டு உள்ளதுடன் கொழுப்புச் சத்து: 4.5 சதவீதம், இதரச் சத்துக்கள்: 9 சதவீதம் S.N.F. உயர்த்தப்பட்டு உள்ளது.

கொழுப்புச் சத்து: 4.5 சதவீதம் மற்றும் இதரச் சத்துக்கள்: 8.5 சதவீதம் S.N.F கொண்ட பழைய ஆவின் கிரீன் மேஜிக் நிலைப்படுத்தப்பட்ட பால் பாக்கெட் தற்போதும் அதே விலையில் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் உற்பத்தியும் நிறுத்தப்படவில்லை. தவறான தகவலைப் பரப்பாதீர்!.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்