கிண்டியில் 118 ஏக்கரில் தோட்டக்கலை பூங்கா - டெண்டர் கோரியது தமிழக அரசு

சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில் தோட்டக்கலை பூங்கா அமைக்க தமிழக அரசு டெண்டர் கோரியது.;

Update:2025-06-22 18:45 IST

கோப்புப்படம் 

சென்னை கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலம் மீட்கப்பட்ட நிலையில், அதில் பொதுமக்களுடைய பயன்பாட்டுக்காக பிரமாண்ட பூங்கா அமைக்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. 4,832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலம் தோட்டக்கலை நிலம் மாற்ற முறையில் ஒப்படைக்கப்பட்டிருந்ததன் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது.

நகரமயமாக்கல், பெருகிவரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு நிலத்தில் பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியிருக்கிறது. அதன்படி சென்னை கிண்டி ரேஸ் கிளப்பில் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கர் நிலத்தில் பசுமை பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பு தயார் செய்வதற்கு தமிழக அரசினுடைய தோட்டக்கலை துறை டெண்டர் கோரி இருக்கிறது.

இந்த பசுமைப் பூங்காவில் மலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகள் உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டு இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்