எனக்கும்தான் மாபெரும் கூட்டம் கூடியது: விஜய்யை விமர்சித்த சரத்குமார்

விஜய்க்காக குவிந்த கூட்டம்தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது.;

Update:2025-09-17 16:26 IST

சென்னை,

தவெக தலைவர் விஜய் கடந்த சனிக்கிழமை திருச்சி, அரியலூரில் பிரசாரம் மேற்கொண்டார். விஜய் செல்லும் இடமெல்லாம் கட்டுக்கடங்கா கூட்டம் காணப்பட்டது. திருச்சி ஏர்போர்ட்டிலிருந்து மரக்கடை வரை மக்கள் வெள்ளத்தில் நீந்தியபடி விஜயின் வாகனம் சென்றது.

விஜய்க்காக குவிந்த கூட்டம்தான் தற்போது தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பையும் பேசுபொருளாகவும் மாறியுள்ளது. விஜய்க்கு கூட்டம் கூடினாலும் அது ஓட்டாக மாறாது; சினிமா நட்சத்திரம் என்பதால் அவரைக் காண மக்கள் கூடுவது இயல்பே என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

இந்த நிலையில், பாஜக நிர்வாகி சரத்குமாரும் விஜயை குறித்த  விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சரத்குமார் கூறுகையில்:“1996-ல் நாட்டாமை, சூர்யவம்சம் போன்ற வெற்றிப் படங்களை கொடுத்த பிறகுதான் நானும் அரசியலுக்கு வந்தேன். ஓய்வுக்கு பிறகு அரசியலுக்கு வரவில்லை. மதுரையிலும் எனக்கே மாபெரும் கூட்டம் கூடியது. அந்த காணொளிக் காட்சிகளை வேண்டும் என்றால் காட்டுகிறேன். கூட்டம் எல்லோருக்கும் வரும்.. விஜய்க்கு கொள்கை, கோட்பாடு கிடையாது..! எதிர்ப்பு அரசியலை தான் செய்கிறார்" என்று தெரிவித்துள்ளர். 

Tags:    

மேலும் செய்திகள்