தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் - அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.;

Update:2025-06-04 12:09 IST

தமிழகத்தில் கொரோனா பரவல் மெல்ல அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் 215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் கடந்த 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிய உத்தரவிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் கொரோனா பரவல் இருந்தாலும், அந்த அளவிற்கு தீவிரம் இல்லை. தேவைப்பட்டால் பள்ளிகளில் முகக்கவசம் அணிவதற்கு உத்தரவிடப்படும். இருப்பினும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்