தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் - தமிழிசை

ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.வெற்றி பெறுவோம் என தமிழிசை தெரிவித்துள்ளார்;

Update:2025-04-13 08:48 IST

சென்னை,

தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

நம் மாபெரும் இயக்கமாம்... தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருக்கும் அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு  எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.நேற்று வரை கட்சியை பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இயக்கிக் கொண்டிருந்த தம்பி அண்ணாமலைக்கு எனது வாழ்த்துக்கள் .

அண்ணன் நைனார் நாகேந்திரன் நேரடியாக இல்லையென்றாலும் பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே ஒரு நாகரிகமான அரசியல்வாதியாக கவனித்து வந்திருக்கிறேன். தன் பணி மீது உறுதியாக இருந்து வெற்றிகளை பெற வேண்டும் என்பதில் அருமையாக உழைக்கக் கூடியவர்.

எங்களோடு இணைந்து பணியாற்றும் பொழுது.அவரது பரந்துபட்டமாநில அரசியலில் உள்ள அனுபவத்தை நான் பார்த்திருக்கிறேன். இன்று பாஜகவை வழிநடத்தும் ஒரு மாபெரும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.

ஒன்றிணைந்து பணியாற்ற கூட்டணி அமைந்திருக்கிறது.நான் நேற்று குறிப்பிட்டதை போல.. "குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும்.. தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்'" .

அதற்கு அண்ணன் நைனார் நாகேந்திரன் அடித்தளம் அமைப்பார். ஒன்றிணைந்து பணியாற்றுவோம்... வெற்றி பெறுவோம் தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும், என தெரிவித்துள்ளார் . 

Tags:    

மேலும் செய்திகள்