பாம்பு கடித்து அஞ்சலக ஊழியர் உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராமத்தை சேர்ந்த ஒருவர், அப்பகுதியில் உள்ள அஞ்சலக கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.;

Update:2026-01-24 19:52 IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கருங்கடல் கிராமத்தை சேர்ந்த அந்தோணிகுரூஸ் (வயது 56), அப்பகுதியில் உள்ள அஞ்சலக கிளையில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது தோட்டத்திற்கு சென்றபோது அந்தோணி குரூஸை பாம்பு கடித்துள்ளது.

இதனால் மயங்கி விழுந்த அவரை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு பேய்க்குளம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர் பரிசோதனை செய்தபோது, அவர் வரும் வழியில் உயிரிழந்தது தெரியவந்தது. பாம்பு கடித்து உயிரிழந்த அந்தோணிகுரூசுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இந்த சம்பவம் குறித்து சாத்தான்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  

Tags:    

மேலும் செய்திகள்