வேலூர் தோல் தொழிற்சாலையில் கேஸ் கசிந்து விபத்து - 2 பேர் உயிரிழப்பு
பணியில் இருந்த 2 தொழிலாளர்கள் கேஸ் கசிவால் மயங்கி விழுந்து உயிரிழந்தனர்.;
வேலூர்,
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகே உள்ள பக்காலப்பல்லி பகுதியில் தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென கேஸ் கசிவு ஏற்பட்டது.
அந்த சமயத்தில் அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் ஷேக் அலி மற்றும் ஜமால் பாஷா ஆகியோர் கேஸ் கசிவால் மயங்கி விழுந்தனர். இதையடுத்து அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.