‘பி.எஸ்.எல்.வி. சி62 தோல்வி ககன்யான் திட்டத்தை பாதிக்காது’ - இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

ராக்கெட்டின் 3-வது கட்டத்தில் கோளாறு ஏற்பட்டதாக வி.நாராயணன் தெரிவித்தார்.;

Update:2026-01-24 19:41 IST

கோவை,

கடந்த 12-ந்தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட், தனது இலக்கை அடையாமல் தோல்வியில் முடிந்தது. இந்த ராக்கெட்டில் டி.ஆர்.டி.ஓ. உருவாக்கிய இ.ஓ.எஸ். என்-1 என்ற செயற்கைக்கோள் உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 16 செயற்கைக்கோள்கள் ஏவப்பட்ட நிலையில், ராக்கெட் தோல்வியால் சுமார் 250 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி. சி62 தோல்வி ககன்யான் திட்டத்தை பாதிக்காது என இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்டத்தில் எந்த தாமதமும் ஏற்படாது. பி.எஸ்.எல்.வி. சி62 தோல்வி ககன்யான் திட்டத்தை பாதிக்காது.

பி.எஸ்.எல்.வி. சி62 ராக்கெட் மொத்தம் 4 கட்டங்களைக் கொண்டது. விண்ணில் ஏவப்பட்ட பிறகு ராக்கெட்டின் 3-வது கட்டத்தில் ஒரு கோளாறு ஏற்பட்டது. இதனால் ராக்கெட் திட்டமிட்ட பாதையை விட்டு விலகிச் சென்றது. இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்