தென் தமிழ்நாடு மக்களின் துயரத்தைப் போக்கியவர் ஜான் பென்னி குயிக் - செல்வப்பெருந்தகை புகழஞ்சலி

ஜான் பென்னி குயிக் செய்த அளப்பறிய செயலை நினைவுகூர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-15 20:11 IST

சென்னை,

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திப்பதாவது;-

தென்மாவட்டத்தில் வறட்சியையும் மக்களின் துயரத்தையும் தீர்க்கும் வகையில் பெரு முயற்சி எடுத்து முல்லைப் பெரியாறு அணையைக் கட்டி கொடுத்தவர், பிரிட்டிஷ் பொறியாளர் ஜான் பென்னிகுக் ஆவார். அவருடைய பிறந்த நாள் இன்று ஜனவரி 15 தேதி.

தன்னலம் கருதாது மக்களின் நலம் கொண்ட மக்கள் செல்வர் மதிப்புமிக்க ஜான் பென்னி குயிக். தன் செல்வம் முழுவதையும் செலவழித்து முல்லைப் பெரியாறு அணையை கட்டி நீரை தேக்கி தென் தமிழ்நாடு மக்களின் துயரத்தைப் போக்கியவர்.

அவருடைய பிறந்தநாள இன்று அவர் செய்த அளப்பறிய செயலை நினைவுகூர்ந்து அவருக்கு புகழஞ்சலி செலுத்துவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்