திருப்பூர்: பெட்ரோல் பங்க்கில் பற்றி எரிந்த தீ - பரபரப்பு சம்பவம்

பெட்ரோல் பங்க் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அங்கிருந்து பதறியடித்து ஓடினர்.;

Update:2026-01-15 18:06 IST

திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையத்தில் உள்ள முக்கிய சாலையில் பெட்ரோல் பங்க் உள்ளது. இந்த பங்க்கில் இன்று மதியம் வாடிக்கையாளர்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பிக்கொண்டிருந்தனர். அப்போது, பெட்ரோல் பங்க்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த பெட்ரோல் பங்க் ஊழியர்களும், வாடிக்கையாளர்களும் அங்கிருந்து பதறியடித்து ஓடினர். தீ மளமளவென பரவியது. உடனடியாக இதுகுறித்து தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பற்றி எரிந்த தீயை அணைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்