கார்த்திகை தீபத்திருவிழா: பக்தர்கள் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள 20 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு

காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை கண்காணிக்க 3 பாதுகாப்பு வசதி குழுக்கள் அமைக்கப்படுகின்றன.;

Update:2025-10-26 11:45 IST

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தீபத் திருவிழாவை முன்னிட்டு வெளி மாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும், அனைத்து பணிகளுக்கும் கண்காணிப்பு குழு அமைப்பது குறித்தும், ஒவ்வொரு துறைப் பணிகளுக்கும் அதன் துறை சார்ந்த அரசு அலுவலர்களை நியமித்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கலெக்டர் ஆலோசனைகளை வழங்கினார்.

அதன் அடிப்படையில் கூட்டத்தில் தீபத்திருவிழாவை சிறப்பாக நடத்துவதற்கு தற்காலிக பஸ் நிலையம், கார் நிறுத்தும் இடம், பொது போக்குவரத்து, சாலை வசதி மேம்பாடு ஆகியவற்றை கண்காணிக்க 4 போக்குவரத்து வசதி குழுக்களும், கோவில் மற்றும் கிரிவலப் பாதையில் மருத்துவ வசதிகளை ஒருங்கிணைக்க 2 மருத்துவ வசதி குழுக்களும், குடிநீர், கழிவறை, தூய்மை, தடையற்ற மின் வசதி ஆகியவற்றை கண்காணிக்க 4 அடிப்படை வசதி குழுக்களும், கண்காணிப்பு கேமரா, பாதுகாப்பு வசதி,

காவலர்களுக்கு அடிப்படை வசதிகளை கண்காணிக்க 3 பாதுகாப்பு வசதி குழுக்களும், தொலைதொடர்பு, கைப்பேசி செயலி வடிவமைப்பு, ஊடக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேற்கொள்ள 3 பொதுமக்கள் தொடர்பு குழுக்களும், தேர் திருவிழா, உணவு பாதுகாப்பு, அன்னதான அனுமதி, மாட்டுச் சந்தை ஏற்பாடு இதர பணிகள் கண்காணிக்க 4 பணி குழுக்களும் அமைக்கப்பட்டது. மேலும் இக்குழுக்களின் செயல்பாடுகளை மாவட்ட வருவாய் அலுவலர் ஒருங்கிணைத்து கண்காணிப்பார் என்று கலெக்டர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்