சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் - அண்ணாமலை புகழஞ்சலி

அமரர் சர்தார் வல்லபாய் படேல் புகழைப் போற்றி வணங்குகிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.;

Update:2025-12-15 10:55 IST

சென்னை,

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதமராகவும், உள்துறை அமைச்சராகவும் பணியாற்றி, ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒருங்கிணைத்து, இன்றைய சுதந்திர இந்தியாவை ஒருங்கிணைத்த சிற்பி, இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும், பாரத ரத்னா, சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் இன்று.

சுதந்திரப் போராட்டத்தில், தலைசிறந்த வழக்கறிஞராக ஆங்கிலேயர்களுக்கு எதிராகச் சட்டப் போராட்டங்களையும், அறவழிப் போராட்டங்களையும் முன்னெடுத்து, சுதந்திரப் போராட்டத்தின் சிப்பாய் என்று அழைக்கப்பட்டவர்.

இந்திய விவசாயிகளின் ஆன்மாவாக, நவீன இந்தியாவை உருவாக்கியவர்களில் முக்கியமானவராகத் திகழும் அமரர் சர்தார் வல்லபாய் படேல் புகழைப் போற்றி வணங்குகிறோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்