கரூர் கூட்ட நெரிசல்: கலெக்டரிடம் நிலவரம் குறித்து கேட்டறிந்த முதல் அமைச்சர்
விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்றவர்களில் 10 பேர் உயிரிழந்து இருப்பதாக அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தவெக தலைவர் விஜய் கரூரில் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சுமார் 30 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியர் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
இதற்கிடையே, முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் கரூர் ஆட்சியரை தொடர்பு கொண்டு நிலவரம் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், அமைச்சர்கள் மா சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு செல்ல முதல் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, மருத்துவமனைக்கு அமைச்சர்கள் விரைந்துள்ளனர்