கிருஷ்ணகிரி: வீடு புகுந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி
அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டனர்.;
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே பர்கூரை அடுத்துள்ள ஒட்டையனூரை சேர்ந்தவர் சரவணா (வயது 30). இவர் பேரண்டப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்றில் காவலாளியாக வேலை பாா்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் அந்த பகுதியில் நடந்து சென்ற போது அங்குள்ள மொட்டை மாடி ஒன்றில் 19 வயது மதிக்கத்தக்க திருமணம் ஆன இளம்பெண் ஒருவர் துணியை காய போட்டுக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சரவணா, அந்த வீட்டிற்குள் புகுந்து மொட்டை மாடிக்கு ஏறிச்சென்று துணியால் அந்த பெண்ணின் கைகளை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது அந்த பெண் கூச்சலிடவே அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அந்த பெண்ணை மீட்டனர். மேலும் சரவணாவை பிடித்து ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணாவை கைது செய்தனர்.