லேப்டாப் வெடித்து பயங்கர விபத்து - ஒருவர் படுகாயம்

40 சதவீதம் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.;

Update:2025-05-15 17:27 IST

கொடைக்கானல் ,

கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் பேன்சி ஸ்டோரில் சார்ஜ் போட்ட படியே ஜெயவீரன் என்கிற மாற்று திறனாளி பயன்படுத்திக்கொண்டிருந்தார். அப்போது யாரும் எதிர்பாராதவிதமாக திடீரென லேப்டாப் வெடித்து. இதன் விளைவாக கடையில் வைத்திருந்த ஒரு லிட்டர் பெட்ரோல் கேனில் தீ ஏற்பட்டது.

இதனால் தீயானது மளமளவென எரியத்தொடங்கியது. இந்த விபத்தில் ஜெயவீரன் படுகாயமடைந்தார். இதனைக்கண்ட அக்கம பக்கத்தினர் ஜெயவீரனை மீட்டு வெளியில் கொண்டுவந்தனர். பின்னர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் இவருக்கு 40 சதவீதம் கை, கால்களில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். மின் கசிவு காரணமாக லேப்டாப் வெடித்து சிதறியதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்