திருவண்ணாமலையில் நாளை மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள்

பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;

Update:2025-06-16 04:26 IST

திருவண்ணாமலை, -

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்களிலும் மற்றும் மன்சுராபாத், அவலூர்பேட்டை ஆகிய துணை மின் நிலையங்களை சார்ந்த கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் குமரன் தெரிவித்து உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்