இன்ஸ்டாகிராமில் காதல்: இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
பெண்ணின் கர்ப்பம் கலைந்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.;
சென்னை,
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் 25 வயது மதிக்கத்தக்க திருமணமான இளம் பெண் ஒருவர் தனது கணவரிடம் விவாகரத்து பெற்று செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவருக்கு அரக்கோணத்தை சேர்ந்த ராகுல் (21) என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. ராகுல் ஒரகடம் பகுதியில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
அடிக்கடி தனிமையில் சந்தித்து பழகி வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பம் அடைந்தார். இதையடுத்து அந்த பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராகுலை வற்புறுத்தி வந்தார். அதற்கு ராகுல் கர்ப்பத்தை கலைத்து விடு. அதன் பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி மருந்து கடையில் மாத்திரை வாங்கி கொடுத்தார். மாத்திரையை சாப்பிட்ட அந்த பெண்ணின் கர்ப்பம் கலைந்து திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அந்த பெண் மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.