மதுரை: வெந்நீரில் விழுந்த 7 மாத பெண் குழந்தை சாவு
மதுரை மாடக்குளம் பகுதியில் 7 மாத குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே இருந்த வெந்நீர் வாளியில் விழுந்தது.;
மதுரை மாடக்குளம் பகுதியை சேர்ந்தவர் சேதுபதி (வயது 31). இவருடைய மனைவி விஜயலட்சுமி. இவர்களுடைய 7 மாத பெண் குழந்தை அதிகாஸ்ரீ. சம்பவத்தன்று குழந்தையை கட்டிலில் தூங்க வைத்து விட்டு, விஜயலட்சுமி வீட்டு வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது குளிப்பதற்காக ‘வாட்டர் ஹீட்டர்' பயன்படுத்தி வாளியில் தண்ணீரை கொதிக்க வைத்திருந்தார். அந்த சமயத்தில் குழந்தை கட்டிலில் இருந்து தவறி கீழே இருந்த வெந்நீர் வாளியில் விழுந்தது. இதில் படுகாயமடைந்த குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.