நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை - அமைச்சர் கே.என்.நேரு

நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.;

Update:2024-12-10 11:09 IST

சென்னை,

தமிழக சட்டசபையின் 2-ம் நாள் கூட்டத்தின் இன்றைய நிகழ்வில் தமிழகம் முழுவதும் மாடுகள், நாய்கள் தொல்லையால் மக்கள் அவதி அடைந்துள்ளனர் என்று இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நகராட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பதில் அளித்து கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது; சென்னையில் உள்ளதைபோல் நாய்கள் இன கட்டுப்பாட்டு மையத்தை, அனைத்து மாவட்டங்களிலும் அமைக்க உள்ளோம். நாய்கள் தொல்லை குறித்த புகார்களுக்கு மாநகராட்சிகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

பிராணிகள் வதை சட்டத்தில் நாய்கள் மற்றும் மாடுகளை முழுமையாக அகற்ற வழியில்லை. சில இடங்களில் மாடுகளை பிடித்தால் அதன் உரிமையாளர்கள் கோபமடைகின்றனர். மாடுகள், நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்களிடம் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்