மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரெயில் நாளை மறுநாள் ரத்து
பராமரிப்பு பணி காரணமாக மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரெயில் திங்கள் கிழமை ரத்து செய்யப்படுகிறது.;
கோவை,
வடகோவை ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் திங்கட்கிழமை கோவை-மேட்டுப்பாளையம் மெமு ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக சேலம் ரெயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடகோகை ரெயில்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள் கிழமை மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம்-கோவை மெமு ரெயில் (வண்டி எண்:- 66613) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
மறு மார்க்கமாக கோவையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை- மேட்டுப்பாளையம் மெமு ரெயில் (எண்:- 66614) அன்றைய தினம் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என அதில் கூறப்பட்டு உள்ளது. இதே ரெயில் நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.