என்றுமே மக்களின் மனதில் இதயக்கனியாக இருப்பவர் எம்.ஜி.ஆர். - நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-17 07:52 IST

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

மக்கள் மனதில் மன்னராக நிரந்தர சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் மக்கள் தலைவர், இன்று தமிழகத்தை ஆட்டிப்படைக்கும் விடியா ஆட்சி செய்யும் திமுகவை தொடர் தோல்விகளால் அலறவிட்டவர்.

நேற்று, இன்று, நாளை என்று, என்றுமே மக்களின் மனதில் இதயக்கனியாக இருப்பவர் வள்ளல், பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ராமச்சந்திரன். மக்கள் தலைவர், புரட்சித்தலைவர், பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆரின் பிறந்த நாளில் அவரை நினைவுகூர்ந்து வணங்குகிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்