சப்-இன்ஸ்பெக்டர் இறந்த அதிர்ச்சியில் தாய் மாரடைப்பால் சாவு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஊட்டி அருகே உள்ள தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார்.;

Update:2026-01-25 13:00 IST

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள பில்லி கம்பை கிராமத்தை சேர்ந்த தன்ராஜ் (வயது 50), ஊட்டி அருகே உள்ள தேனாடுகம்பை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தார். அவர் நேற்று முன்தினம் ஊட்டி கோர்ட்டுக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பு ஏற்பட்டு தன்ராஜ் இறந்தார். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த சப்-இன்ஸ்பெக்டரின் தாய் மிச்சியம்மாள்(80) சோகம் தாளாமல் நேற்று திடீரென மாரடைப்பால் இறந்தார். 

Tags:    

மேலும் செய்திகள்