கஞ்சா விற்ற வழக்கில் போலீஸ்காரர் பணியிடை நீக்கம்
ஊட்டியில் கஞ்சா விற்ற ஒருவருக்கு உடந்தையாக இருந்த ஊட்டி மத்திய காவல் நிலைய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.;
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் கடந்த 21ம் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது ஊட்டியை சேர்ந்த குரூஸ் (வயது 26) என்பவர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் கஞ்சா விற்பனையில் அவருக்கு உடந்தையாக இருந்த ஊட்டி மத்திய போலீஸ் நிலைய போலீஸ்காரரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நசீர் அகமது(26) என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து கஞ்சா விற்ற வழக்கில் கைதான நசீர் அகமதுவை பணியிடை நீக்கம் செய்து நீலகிரி மாவட்ட போலீஸ் எஸ்.பி. நிஷா உத்தரவிட்டார்.