’மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்’ - கனிமொழி எம்.பி.

மொழிப்போர் தியாகிகளின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம் என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.;

Update:2026-01-25 12:19 IST

சென்னை,

இந்தி திணிப்பை எதிர்த்து போராடி உயிரீந்தவர்களை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு கனிமொழி எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"எண்ணில்லா போராட்டங்களும், விலை மதிப்பில்லா உயிர்த் தியாகங்களும் செய்து அன்னைத் தமிழைக் காத்த தியாகிகளின் நினைவைப் போற்றிடும் நாள் இன்று. இந்தித் திணிப்பிற்கு எதிராகப் போராடிய அவர்களின் வழியில் என்றும் நம் மொழியுரிமையைக் காத்து நிற்போம். மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம்."

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.    

Tags:    

மேலும் செய்திகள்