அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகள் - நயினார் நாகேந்திரன்
நம் வாழ்வில் கல்வியிலும், தொழிலிலும் வளம் பெற முப்பெரும் தேவியரும் எப்போதும் துணை நிற்கட்டும் என தெரிவித்துள்ளார்.;
சென்னை,
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அனைவருக்கும் எனது இனிய ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றிலும் சிறந்து விளங்க நாம் அனைவருக்கும் துணை நிற்கும் ஸ்ரீ அம்பாளுக்கு நன்றி சொல்லும் விதமாகக் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா, இன்றைய சரஸ்வதி பூஜை திருநாளுடன் நிறைவடைகிறது.
இன்றைய நாளில் நாம் ஒற்றுமையுடன் வழிபாடு செய்து, கல்வி தரும் சரஸ்வதி தேவி, செல்வம் தரும் லட்சுமி தேவி, வீரம் தரும் பார்வதி தேவி ஆகியோருக்கு நன்றி செலுத்துவோம்.
நம் வாழ்வில் கல்வியிலும், தொழிலிலும் வளம் பெற முப்பெரும் தேவியரும் எப்போதும் துணை நிற்கட்டும் என தெரிவித்துள்ளார்.