சென்னை துறைமுகத்தில் கடற்படை தின கொண்டாட்டம்: 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை

இந்திய கடற்படையின் வலிமை மற்றும் கடல்சார் தொழில்நுட்பத் திறமையை பார்வையாளர்கள் நேரில் கண்டனர்.;

Update:2025-11-26 14:21 IST

சென்னை,

கடற்படை தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, கிழக்கு கடற்படையைச் சேர்ந்த நான்கு கப்பல்களான ஐ.என்.எஸ். ஹிம்கிரி, ஐ.என்.எஸ். உதயகிரி, ஐ.என்.எஸ். ரன்வீர் மற்றும் ஐ.என்.எஸ். சத்புரா ஆகியவை நவம்பர் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சென்னை துறைமுகத்தை வந்தடைந்தன. அவற்றை பார்வையிட மாணவர்கள், என்.சி.சி. குழுவினர், முன்னாள் வீரர்கள் மற்றும் கடற்படை குடும்பங்கள் உட்பட 3,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருகை தந்தனர்.

இந்திய கடற்படையின் வலிமை மற்றும் கடல்சார் தொழில்நுட்பத் திறமையை பார்வையாளர்கள் நேரில் கண்டனர். மேலும் சிறிய ஆயுதங்களைக் கையாளுதல், CPR பயிற்சி மற்றும் தீயணைப்பு நுட்பங்கள் குறித்த செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் இளம் தலைமுறையினருக்கு இந்திய கடற்படையின் செயல்பாட்டுத் திறன்கள் மற்றும் போர்க்கப்பலில் வாழ்க்கை நடைமுறை பற்றிய நுண்ணறிவைப் பெற ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.

இந்தியாவின் கடல்சார் வலிமையை வெளிப்படுத்தவும், இந்திய கடற்படையில் சேர்ந்து தேசத்திற்கு சேவை செய்ய இளைஞர்களை ஊக்குவிக்கவும், தேசத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்கு பங்களிக்கவும் இந்த நிகழ்வு உதவியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 930-க்கும் மேற்பட்ட மாணவர்கள், 375 என்.சி.சி. பயிற்சி மாணவர்கள் மற்றும் 364 ராணுவ பயிற்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர், இவர்களுடன் முன்னாள் வீரர்கள் மற்றும் கடற்படை குடும்பங்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்